×

1,000 ஆண்டு கோயில்களுக்கு ரூ.100 கோடியில் திருப்பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி (அதிமுக) பேசுகையில், சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள சிறுபண்ணாரி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர அரசு முன்வருமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,  பண்ணாரி அம்மன் கோயிலை பொறுத்தளவில் முதல்வர் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கை நடைபெறுகிற 4ம் தேதி பாருங்கள். அன்றைக்கு பல்வேறு வகையான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட செய்திருக்கிறார்கள். உறுப்பினர் உள்ளம் குளிர்ந்து, நம்முடைய பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டியது போல் வெள்ளை மனதோடு அன்றைய தினம் உங்களுடைய பாராட்டு எங்களுக்கு கிடைக்கும் வகையில்  அறிவிப்புகள் இருக்கும்’’ என்றார்.

வில்வநாதன் எம்எல்ஏ (திமுக) பேசுகையில், ‘‘ஆம்பூர் நாகநாத சாமி கோயில் மற்றும் பெரிய ஆஞ்சநேயர் கோயில், சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு நீண்டநாளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. குடமுழுக்கு நடத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘முதல்வர் கடந்த 2021-2022ம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும், அதே போன்று 2022-2023ம் ஆண்டிற்காக பட்ஜெட் அறிக்கையிலும் தலா ₹100 கோடி நிதியை கோயில் திருப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறார்.  இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹100 கோடி நிதியை பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர் கேட்ட அனைத்து கோயில்களிலும் திருப்பணிகளுக்கு எடுத்து கொள்ளப்பட்டு, வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ என்றார்.

Tags : Minister ,BK Sekarbabu , Rs 100 crore restoration work for 1,000 year old temples: Minister BK Sekarbabu
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...